தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபாட்டிலால் இளைஞர் கழுத்தறுத்து கொலை - மதுக்கொலைகள்

திருப்பூர்: பல்லடம் திருப்பூர் பிரதான சாலையோரம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

youth murder in tiruppur  Youth killed by beheading  youth murder  Tiruppur Latest News  மது பாட்டிலால் இளைஞர் கழுத்தறுத்து கொலை  பல்லடத்தில் கழுத்து அறுத்து இளைஞர் கொலை  மதுக்கொலைகள்  திருப்பூர் தற்போதைய செய்திகள்
youth murder in tiruppur

By

Published : Dec 28, 2020, 12:22 PM IST

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த தெற்கு பாளையம் பிரிவு அருகே சாலையோரமாக இளைஞர் ஒருவரின் சடலம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொது மக்கள், பல்லடம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

காவல் துறை விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். முதல் கட்ட விசாரணையில், இறந்த இளைஞர் மானாமதுரையைச் சேர்ந்த முருகன் என்பதும், மதுபோதையில் நடந்த தகராறில் அவர் மதுபாட்டிலால் கழுத்தறுக்கப்பட்டு, அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது.

மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர், இளைஞரை கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்கள் யார் என்பது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மதுவால் நேர்ந்த சோகம்: ரயில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details