திருப்பூர், பழைய பேருந்து நிலையத்திலிருந்து பல்லடம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் ஏறிய இளைஞர் ஒருவர், பெண்கள் வரிசையில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார். இதைப் பார்த்த பேருந்தின் நடத்துநர் பின்னால் சென்று நிற்க அறிவுரை கூறியுள்ளார். ஆனால், அந்த இளைஞர் நடத்துநரின் பேச்சைக் கேட்காமல் அதே இடத்தில் நின்றுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் சண்டையாக மாறியுள்ளது.
அப்போது, பேருந்தில் பயணித்த சக பயணிகள் நடத்துநருக்கு ஆதரவாக அந்த இளைஞரைப் பிடித்து அடித்துள்ளனர். மேலும், பேருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செல்லும் போது, வாசலில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்களிடம் பிடித்துக் கொடுத்தனர்