தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பர்களுடன் மது அருந்த சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - காவல்துறை தீவிர விசாரணை - Youth drowns to death after drinking alcohol with friends

திருப்பூர்: நொய்யல் ஆற்றின் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறையினரிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Youth drowns to death
Youth drowns to death

By

Published : Oct 26, 2020, 4:20 PM IST

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ரத்தினம் (27). ஊட்டியைச் சேர்ந்த இவர் இங்குத் தங்கு பணியாற்றி வந்தார். நேற்று(அக்-26) விடுமுறை நாள் என்பதால் தனது நண்பர்களுடன் சேர்ந்து மங்கலம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றங்கரைக்குச் சென்று மது அருந்தியுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாகப் போதையிலிருந்த ரத்தினம் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது நண்பர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் இன்று(அக்-26) அவரது உடலை மீட்ட பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக

அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்க காவல்துறையினர் ரத்தினத்துடன் மது அருந்தச் சென்ற அவரது நண்பர்கள் வினோத், ராஜா, சுபாஷ், மாணிக்கவேல் ராஜா உள்ளிட்ட 5 பேரி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த ரத்தினத்தின் உறவினர்கள், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என பல்லடம் அரசு மருத்துவமனையில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details