திருப்பூர், புதூர் மெயின் ரோடு, சுப்பிரமணியம் நகர் பகுதியைச் சேர்ந்த மோகன்சஞ்சை (19), ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த அசோக் (19) ஆகிய இருவரும் ஈரோட்டிலுள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார்கள். இந்நிலையில், கல்லூரி விடுமுறை நாள் என்பதால் காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம், காளியப்பாநகரில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இருவரும் இடுப்பில் டியூப் கட்டி கிணற்றில் குளித்துள்ளனர்.
அசோக் கிணற்றின் மேலே ஏறியதும் மோகன் சஞ்சை மட்டும் கிணற்றில் குளித்துள்ளார்.
கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி! - thirupur
திருப்பூர்: ராக்கியாபாளையம் காளியப்பாநகர் பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோகன்சஞ்சை
அப்போது, எதிர்பாராத விதமாக டியூபில் இருந்த காற்று இறங்கியதால் மோகன் சஞ்சை நீரில் மூழ்கியுள்ளார். இது குறித்து அசோக் அருகிலிருந்தவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலரிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் அரை மணி நேர தேடுதலுக்கு பிறகு மோகன் சஞ்சையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து ஊரக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.