திருப்பூர் மாவட்டம் உடுமலை கொழுமம் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிக்கு, தமிழ்நாடு அரசின் பாடப் புத்தகங்கள் வாகனத்தில் கொண்டுவரப்பட்டன. அதனால் பள்ளியின் தலைமையாசிரியர் தாமரைச்செல்வி பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் பள்ளி வளாகத்தில் நுழைந்தபோது, அதிகளவில் ரத்தம் தரையில் இருந்துள்ளதை கவனித்துள்ளார்.
ரத்தம் காணப்பட்ட இடத்திலிருந்து ஒருவர் இழுத்துச் செல்லப்பட்டதற்கான அடையாளமிருந்ததால் அதனை பின்தொடர்ந்த தாமரைச்செல்வி, 50 மீட்டர் தொலைவில் படுகாயங்களுடன் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் குமரலிங்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.