திருப்பூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகேவுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கி கிளை அமைந்துள்ளது.
கூட்டுறவு வங்கியில் திருட்டு முயற்ச்சி:
இங்கு, டிச.27ஆம் தேதி இரவு 10.30 மணியளவில், வங்கியின் முன்பக்க கதவுகளை உடைத்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சத்தம் கேட்டு வந்த காவலாளியை கண்டதும், திருடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இது குறித்து மாவட்ட பொது மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மடத்துக்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக அங்கிருந்த கண்காணிப்பு மேராவில் பதிவான காட்சிகள், கைரேகைகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.