திருப்பூர் எஸ்.ஏ.பி சந்திப்பு பகுதியில் கடந்த 30ஆம் தேதி மாலை போக்குவரத்து காவலர் பொன்னங்கன் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியே மதுபோதையில் வந்த இளைஞர்கள் மூவர், போக்குவரத்து காவலர் பொன்னங்கனை தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியைச் சேர்ந்த முரளி, உதயகுமார், ஹரிஹரன் என்பது தெரியவந்தது.
போதையில் காவலரை தாக்கிய இளைஞர்கள் மன்னிப்பு - assaulting policeman
திருப்பூர்: குடி போதையில் போக்குவரத்து காவலரை தாக்கிய இளைஞர்கள், அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இளைஞர்கள் மன்னிப்பு
மேலும், மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மூவரும், போதையில் காவலரை தாக்கியதாகவும், தாங்கள் செய்தது தவறு என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.