திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மூணாறு சாலையில் ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதி அமைந்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 10 மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்ததால், வனப்பகுதி வழியாக மூணாறு, மறையூர் செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, தற்போது சுற்றுலா பயணிகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொங்கல் பண்டிகை விடுமுறையை கழிக்க இவ்வழியாக சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
சாலையில் நடுவே நிற்கும் காட்டுயானை சின்னார் வனப்பகுதியில் அவ்வப்போது யானைகள் சாலையில் உலா வருவது வழக்கம். இந்நிலையில் அதிகமான வாகனங்கள் சாலையில் செல்லும்போது, வனப்பகுதியில் இருந்து சாலையை கடக்க முயற்சித்த யானை கூட்டம் ஒன்று வாகனங்களை வழிமறித்து தன் கூட்டங்கள் செல்வதற்காக காத்திருந்தது.
காட்டுயானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்! அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனம் ஓட்டிவந்த வாலிபர்கள் ஆபத்தை உணராமல் அத்துமீறி அதிவேகமாக வந்தனர். அவர்களை காட்டு யானை தாக்க முற்பட்டு சிறிது தூரம் விரட்டியது இதில் நூலிழையில் வாலிபர்கள் உயிர் தப்பினர். அப்போது, அவ்வழியே வந்த மலை வாழ் மக்களில் ஒருவர் அந்த காட்டு யானையை விரட்டினார். யானை அவர் விரட்டியதை கண்டு பிளிறலிட்டு செல்ல விருப்பமில்லாமல் சாலையை விட்டு கீழே இறங்கியது.
இதன்பின்பே சாலையில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்றாக சென்றது. இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை உணர்ந்து பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும், வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் செல்லுமாறு அறிவுறுத்திவருகின்றனர்.
காட்டுயானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்! வனத்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி சில வாகன ஓட்டிகள் அஜாக்கிரதையாக வனவிலங்குகளை கண்டவுடன் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுபோன்ற வாகன ஓட்டிகளால், அவர்களுக்கு மட்டுமின்றி வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இவ்வாறான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கண்டெய்னர் லாரி மோதி யானை உயிரிழப்பு