திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிக்குள்பட்ட கரைப்புதூரில் இன்று காலை சாலையோரத்தில் ஏதோ எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளனர். அப்போது அங்கே பெண் எரிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உடனடியாகக் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இரண்டாக வெட்டப்பட்டு எரிந்த நிலையில் கிடந்த உடல் இளம்பெண் என்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து கைரேகை வல்லுநர்கள், தடயவியல் வல்லுநர்கள், மோப்ப நாய் ஆகியோர் நிகழ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. உடல் முழுவதுமாக எரிக்கப்பட்டதால் அடையாளம் தெரியாத நிலையில் இருந்த பெண்ணின் உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினரால் அனுப்பிவைக்கப்பட்டது.
இரண்டாக வெட்டப்பட்டு இளம்பெண் எரிப்பு உடற்கூறாய்வின் முதல்கட்ட சோதனையில் வெட்டி எரிக்கப்பட்டவர் 26 மதிக்கத்தக்க இளம்பெண்ணாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இறந்த பெண் யார், அவரைக் கொலைசெய்தவர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:விலை உயர்ந்த கார் திருட்டு - வைராலாகும் சிசிடிவி காட்சிகள்