தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனம் விபத்து: 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்! - திருப்பூர் மாவட்டச் செய்திகள்

திருப்பூர்: பனியன் தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

திருப்பூர்
வாகன விபத்து

By

Published : Oct 24, 2020, 2:30 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே எரங்காட்டூர் பகுதியிலிருந்து திருப்பூரில் உள்ள பனியன் கம்பனிக்கு இன்று (அக். 24) காலை தொழிலாளர்களை வேன் மூலமாக அழைத்து வந்தனர். வேனில் 30 தொழிலாளர்கள் இருந்தனர்.

அவிநாசி அருகே கருமாபாளையம் தண்ணீர்ப்பந்தல் பகுதியில் வாகனம் வந்து கொண்டிருந்தபோது, திடீரென முன்பக்க டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேன் ஓட்டுநர் ரமேஷ் , நாகரத்தினம் (39), பிரியா (18), தங்கமணி (29), கவுசிகா (26), மோகனா, பூபதி ராஜ் (39), மகேசுவரி (30), கவி நிலா, சத்தி (30), பூங்கொடி (34), சங்கீதா (20), சரசுவதி (50), மயிலாள் (42), பெரியநாயகி (20) உள்ளிட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

உடனடியாக இவர்களை அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து முதலுதவி சிகிச்சையளித்தனர். படுகாயமடைந்த நான்கு பெண்கள் மட்டும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் சென்றனர்.

இது குறித்து சேயூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 12 பேர் மட்டுமே பயணிக்க கூடிய மகேந்திரா மேக்ஸ் கேப் வேனில் 23 பேர் ஏற்றி வந்ததுதான் விபத்துக்கு காரணம் என முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details