உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ரா கிராமத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு பல மாநில மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (அக்.2) திருப்பூர் மாநகராட்சிக்கு எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.