தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு! - women killed in truck collision

திருப்பூர்: அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுத்திய லாரி
விபத்து ஏற்படுத்திய லாரி

By

Published : Jan 11, 2021, 3:15 PM IST

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயில் பகுதியிலிருந்து இன்று அதிகாலை ஜல்லிக்கல் லோடு ஏற்றி சென்ற லாரி, அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. அதன் காரணமாக லாரி, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய அனுப்பர்பாளையம் காவல் துறையின் முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த மூதாட்டியின் பெயர் தெய்வானை என்பதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது மகன் பழனிசாமி என்பதும் தெரியவந்தது. மேலும், போலீசார் விபத்து ஏற்பட்டுத்திய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:தானே தீ விபத்தில் தீயணைப்பு வீரர் உட்பட 7 பேர் காயம்

ABOUT THE AUTHOR

...view details