தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்! - ஊராட்சி நிர்வாகம

திருப்பூர்: பல்லடம் அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தியும், 20 நாட்களாக குடிநீர் வழங்காத ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Women block road with empty buckets condemning the panchayat administration!
Women block road with empty buckets condemning the panchayat administration!

By

Published : Aug 12, 2020, 4:19 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சியிலுள்ள அறிவொளி நகரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையடுத்து, பல்லடம் ஒன்றிய தலைவர் நிதியிலிருந்து ரூ. 32 லட்சம் மதிப்பில் சாக்கடைகள் அமைக்கும் பணி துவங்கியது. ஒரு மாதத்திற்கு முன்பே துவங்கப்பட்ட இந்த பணி, கடந்த 10 நாட்களாக நடைபெறவில்லை. மேலும் ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சியிலிருந்து அறிவொளி நகர் பகுதிக்கு கடந்த 20 நாட்களுக்கும், மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை.

இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் இன்று (ஆகஸ்ட் 12) சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கிடப்பில் போடப்பட்டுள்ள சாக்கடை கால்வாய் பணியை உடனடியாக முடிக்க வேண்டும் என்றும், இரு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தாசில்தார், ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பல்லடம் டி.எஸ்.பி முருகவேல் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சாக்கடைப் பணிகள் விரைவில் முடிக்கப்படும், குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் என அலுவலர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டுச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details