தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் - திருப்பூர் காவல் துறையினர் விசாரணை! - கைகள் கட்டபட்ட நிலையில் பெண்ணின் உடல்

திருப்பூர்: பெருமாள் கவுண்டன் வலசு பகுதியில் சாலையோரம் இளம் பெண்ணின் உடல் கைகள் கட்டபட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tirupur

By

Published : Nov 18, 2019, 9:45 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பெருமாள் கவுண்டன் வலசு பகுதியில் சாலையோரம் இளம் பெண் ஒருவரின் உடல் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதாக மூலனூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் வனிதாமணி தலைமையிலான காவல் துறையினர், பெண்ணின் உடலைக் கைப்பற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.

இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதி

பிணமாகக் கிடந்த அப்பெண்ணின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டும், வாயில் துணி திணிக்கபட்டும் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உடலின் அருகே பெண்ணின் உள்ளாடையோடு ஆணின் உள்ளாடையும் கிடந்]துள்ளது.

இதனால் அப்பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மேலவளவு கொலையாளிகள் விடுதலை விவகாரம் - தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details