திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்தவர் திருமலைசாமி. இவரது மனைவி சுமதி(24). இருவரும் கூலி வேலைக்குச் சென்று குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், திருமலை சாமிக்கு தம்பி முறை உறவினரான கணேசன் என்பவருடன் இருந்த நட்பை கண்டித்த சுமதி, கணேசனுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
கணவனின் நட்பை கண்டித்த இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு! - இளம்பெண் கொலை,
திருப்பூர்: தனது கணவனின் நட்பை கண்டித்த இளம்பெண், கணவனின் உறவினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவனின் நட்பை கண்டித்த இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!
இதனால் வீட்டில் தனியாக இருந்த சுமதியை சந்தித்து தன்னிடம் பேசாதது குறித்து கணேசன் கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஆனதில், கோபமடைந்த கணேசன் சுமதியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனால் சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சுமதியின் உடலை எடுத்து உடற்கூராய்வுக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த உடுமலை காவல் துறையினர், கணேசன் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடிவருகின்றனர்.