இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திண்டுக்கலில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருப்பூரில், சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப் பட்டனர்.
இந்து முன்னணி மாநில தலைவர் கைது ஏன்?
திருப்பூர்: இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.
காடேஸ்வரா சுப்பிரமணியம் திண்டுக்கல் மலைக்கோட்டையில் உள்ள கோயிலில் 144 தடை உத்தரவை மீறி கிரிவலம் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் திண்டுக்கல் மாவட்ட ஏடிஎஸ்பி நேற்று (டிச.29) அவரை கைது செய்தார். அதனைக் கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அருகே இந்து முன்னணியினர் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காடேஸ்வரா சுப்பிரமணியம் விடுவிக்கக் கோரியும், கிரிவலம் சுற்றுவதற்கு அனுமதி கொடுத்து விட்டு பிறகு சுப்பிரமணியத்திக்கு வழங்கப்பட்ட அனுமதியை மறுத்து கைது செய்ததைக் கண்டித்தும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஏடிஎஸ்பி இனிக்கோ திவ்யன் வேண்டுமென்றே சூழ்ச்சி செய்து கைது செய்ததாகவும், ஏடிஎஸ்பி இனிக்கோ திவ்யன் மீது தமிழ்நாடு காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.