திருப்பூர்: ஈஸ்வரமூர்த்தி லே அவுட் என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டியின் திட்ட மதிப்பீடு ரூ.7.70 லட்சம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது அப்பகுதியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியின் 50ஆவது வார்டு ஈஸ்வரமூர்த்தி லே அவுட் என்ற பகுதியின் 1ஆவது வீதியில் ஏற்கெனவே இருந்த கை பம்பினை அகற்றி, மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் வசதி செய்துதர திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி அந்த தெருவில் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க் பொருத்தப்பட்டு, கடந்த அக்.7ஆம் தேதியன்று மக்கள் பயன்பாட்டிற்காக திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரனால் கொண்டு வரப்பட்டது. அந்த தண்ணீர் தொட்டியில் திட்ட மதிப்பீடாக 7.70 லட்சம் ரூபாய் என போடப்பட்டிருக்கிறது.