திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாய் வழியாக 570 மில்லியன் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே அமராவதி அணை வறட்சியாக காணப்பட்டது. இந்நிலையில் அமராவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தேனாறு, சின்னார், மறையூர் போன்ற இடங்களில் அதிகப்படியான மழை பெய்து வருவதால், அணையின் நீர் மட்டம் வெகுவாக உயரந்து கொண்டிருக்கிறது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு! - amaravathi dam
திருப்பூர்: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அமராவதி அணையிலிருந்து பிரதான கால்வாய் வழியாக 570 மில்லியன் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதையடுத்து புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இன்று முதல் 25ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் 25 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலம் பயன்பெறும் என்று விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் அமராவதி அணையின் மொத்தக்கொள்ளளவு 90அடியில், தற்போது நீர் வரத்து 3023 கன அடியாக இருப்பதால், நீரின் அளவு 73.76 அடியாக உயர்ந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இதேபோல் தொடர்ந்து மழை பெய்தால் விரைவில் அணை முழுக்கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.