தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்றாம் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறப்பு - திருப்பூர் திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறப்பு

திருப்பூர்: மூன்றாம் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது.

Water release from Thirumoorthy Dam
மூன்றாம் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறப்பு

By

Published : Jan 12, 2021, 11:41 AM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நேற்று (ஜன.11) தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மின்மோட்டாரை இயக்கி தண்ணீரை திறந்துவிட்டார். நேற்று முதல் (ஜன 11) நீர்வரத்தை பொறுத்து 9500 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கேயம், கோயம்புத்தூர் சூலூர் பகுதியில் உள்ள 94,362 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறப்பு

இந்தத் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு, முன்னாள் பொள்ளாச்சி எம்.பி.மகேந்திரன் உட்பட பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீருக்கு மலர் தூவினர்.

இதையும் படிங்க:இ-பதிவு முறை: கொடைக்கானலில் குறையும் சுற்றுலாப் பயணிகளின் வருகை

ABOUT THE AUTHOR

...view details