திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதைக் கண்டித்தும், இதனை தடுக்க வலியுறுத்தியும் பல முறை அலுவலர்களிடம், காவல் துறையினரிடமும் பொதுமக்கள் சார்பில் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் தேன்மொழி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஐந்தாவது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன், சட்டவிரோதமாக நடைபெற்றுவரும் மது விற்பனையை தடுக்க வலியுறுத்தி மது பாட்டில்களை கழுத்தில் மாலையாக அணிந்து கூட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.