தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழ்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
வாக்குப்பதிவு செய்முறை பயிற்சி! - Voting training
திருப்பூரில் பொதுமக்களின் செய்முறை பயிற்சிக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டன.
பொதுமக்களுக்கு வாக்களிக்கும் பயிற்சி
இந்த விழிப்புணவு மூலம் பயிற்சி அளிக்கும் வகையில் பல்வேறு இடங்களுக்கு தேர்தல் பிரிவு சார்பாக காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதற்கு தாலுகா அலுவலகத்தில் இருந்து 167 இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான விஜயகார்த்திகேயன் முன்னிலையில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றன.