ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அடுத்தமாதம் 18ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கானதேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.
திருப்பூர் வந்தடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்! - வாக்கு இயந்திரங்கள்
திருப்பூர்: நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூரில் உள்ள எட்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
வாக்குபதிவு இயந்திரங்கள்
இந்நிலையில், திருப்பூரில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளான பல்லடம், திருப்பூர் தெற்கு, வடக்கு, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம் மற்றும் அவினாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு சரிபார்க்கும் இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
சுமார் 3,075 இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கே.எஸ்.பழனிச்சாமி முன்னிலையில் அனுப்பிவைக்கப்பட்டது.