திருப்பூர் மாவட்டதில் மழை காலம் என்பதால் காற்றில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, திருப்பூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழு பெண்கள் உள்ளிட்ட நாற்பது பேரும், காய்ச்சலுக்கு என தனியாக அமைக்கப்பட்டுள்ள பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூரில் பரவும் வைரஸ் காய்ச்சல்; 40 பேருக்கு சிகிச்சை! - காற்றில் பரவக்கூடிய வைரஸ்
திருப்பூர் : அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழு பெண்கள் உட்பட நாற்பது பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
![திருப்பூரில் பரவும் வைரஸ் காய்ச்சல்; 40 பேருக்கு சிகிச்சை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4581320-thumbnail-3x2-tripur.jpg)
மேலும், பத்து மருத்துவர்கள் கொண்ட குழு இந்த காய்ச்சல் பிரிவுக்கு என தனியாக அமைக்கப்பட்டு நோயாளிகளை இரவு, பகலாக கண்காணித்துவருகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள், நிலவேம்பு கசாயம், ஓஆர்எஸ் கரைசல் போன்றவை வழங்கப்பட்டுவருகிறது. மேலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரியவந்தால் அதற்கு உண்டான சிகிச்சைகள் அளிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : பச்சிளம் குழந்தையின் காய்ச்சலுக்கு வயிற்றுப் பூச்சி மருந்து...! - உயிருக்கு உலைவைக்கும் சுகாதாரத் துறை!