தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓஎன்ஜிசி வாகனங்களைச் சிறைப்பிடிப்பு: திருவாரூர் அருகே பரபரப்பு - ஓஎன்ஜிசி நிறுவனம்

திருவாரூர்: ஓடாச்சேரி அருகே ஓஎன்ஜிசி நிறுவன வாகனங்களை கிராம மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

thiruvarur
thiruvarur

By

Published : Feb 26, 2020, 9:27 PM IST

திருவாரூர் மாவட்டம் ஓடாச்சேரி, தென்னங்குடி கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்துவருகிறது. அதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து, பொதுமக்கள் குடிநீருக்காக சுமார் 2 கி.மீ. தூரம் செல்லுகின்றனர்.

எனவே நிலத்தடி நீர் பற்றாக்குறைக்குக் காரணமான ஓஎன்ஜிசி நிறுவனமே குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் மனு அளித்தனர்.

அதன்பின் சில வாரங்களுக்கு முன்பு ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் மீண்டும் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர். அப்போது கிராம மக்கள் அலுவலர்களிடம் குடிநீர் வசதி மனு குறித்து கேட்டுள்ளனர்.

அதில் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது தெரியவந்தது. அதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஓஎன்ஜிசி வாகனங்கள் செல்லும் சாலையில் இன்று திடீரென்று முள்வேலி அமைத்து, வாகனங்களைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓஎன்ஜிசி வாகனங்களைச் சிறைப்பிடித்த கிராம மக்கள்

இச்சம்பவம் குறித்து வைப்பூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு விரைந்த காவல் துறையினர் ஓஎன்ஜிசி நிறுவன அலுவலர்களிடமும், கிராம மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு மாதத்திற்குள் குடிநீர் வசதிகளை ஏற்பாடு செய்துதருவதாக உத்தரவாதம் அளித்தபின் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க:ஓஎன்ஜிசி நிறுவனத்தை தடுத்து நிறுத்தக் கோரிக்கை: பி.ஆர்.பாண்டியன் மனு

ABOUT THE AUTHOR

...view details