தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தவறு செய்யும் பால் நிறுவனத்தின் பெயரை வெளியிட வேண்டும் - விக்கிரமராஜா! - வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா

திருப்பூர்: மத்திய அமைச்சர் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாலில் நச்சு தன்மை உள்ளதாக தெரிவித்தையடுத்து தவறு செய்யும் பால் நிறுவனத்தின் பெயரை அரசு வெளியிட வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Vikkiramaraja Press Meet

By

Published : Nov 24, 2019, 11:21 PM IST

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், வணிகர் சங்க மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும் இணையதள வர்த்தகத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி இந்தியாவில் மாநிலந்தோறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் வருகிற17ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் திருப்பூரில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொள்கின்றனர்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் பாலில் அதிக நச்சுத்தன்மை உள்ளதாக மத்திய சுகாதரதுறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார்.

எந்த நிறுவனத்தின் பாலில் தவறு உள்ளது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். உற்பத்தியாளர்கள் செய்கின்ற தவறுக்கு தாங்களும் துணை போகிறோமோ என்ற அச்சம் தங்களுக்கும் எழுகிறது.

விக்கிரமராஜா பேட்டி

உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் உணவு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாறாக வணிக நிறுவனங்களிள் ஆய்வு நடத்தி வணிகர்களை மிரட்டும் பணியை தவிர்க்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:

’பாலில் நச்சுத்தன்மை மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ - ராஜேந்திர பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details