அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கட்சி நிகழ்ச்சிகாக வெளிவந்த விஜயகாந்த்; தொண்டர்கள் உற்சாகம்! - thiruppur
திருப்பூர்: தேமுதிக முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் இன்று திருப்பூர் வந்தடைந்தார்.
இதில் கலந்து கொள்வதற்காக தேமுதிகவின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, மற்றும் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் இன்று திருப்பூர் வந்தடைந்தனர்.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபின் அதிகமாக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத விஜயகாந்த், நெடு நாட்களுக்கு பிறகு வெகு தூர பயணமாக சென்னையிலிருந்து திருப்பூர் வந்தார். அவரை காண்பதற்காகவும், அவரை வரவேற்கவும் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் காத்திருந்து வரவேற்றனர். அப்போது தொண்டர்களிடையே கையசைத்த விஜயகாந்த், சில நொடிகளில் அங்கிருந்து சென்றார்.