திருப்பூர் நகராட்சி மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் நகராட்சி அலுவலர், ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டியில் சொந்தமாக வீடு கட்டிவருகிறார். இவரது வீட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
கட்டுமானப் பணியில் தேவையான பொருள்களை எடுத்து வருவதும் கட்டுமானப் பயன்பாட்டிற்கு பின், அங்கு உள்ள பொருள்களை பிற இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு நகாரட்சி பணியாளர்கள் மற்றும் வாகனத்தை பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
சம்பந்தபட்ட நகராட்சி அலுவலர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்த வந்தநிலையில் சமூக ஆர்வலர், நகராட்சி அலுவலரின் வீட்டின் கட்டுமானப் பணி முடிந்த செம்மண்ணை நகராட்சி பணியாளர்கள் அள்ளி, நகராட்சி வாகனத்தில் ஏற்றும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நகராட்சி அலுவலரின் சொந்த உபயோகத்துக்கு நகராட்சி வாகனம் மற்றும் பணியாளர்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை