தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.5 கோடிக்கு மேல் மோசடி செய்த நபர் குடும்பத்துடன் தலைமறைவு - பாதிக்கப்பட்டோர் புகார்! - கள்ளம்பாளையம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடிக்கு மேல் மோசடி

திருப்பூர்: கள்ளம்பாளையம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடிக்கு மேல் மோசடி செய்த நபர் குடும்பத்துடன் தலைமறைவாகியதால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

thirupur

By

Published : Oct 1, 2019, 11:19 PM IST

திருப்பூர், கள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேலு. 40 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்துவரும் இவர், அங்கு ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவரிடம் கள்ளம்பாளையம், ராயபுரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை ஏலச்சீட்டில் பணம் செலுத்திவந்தனர்.

ஆரம்பத்தில் முறையாக பணத்தை திருப்பி அளித்து வந்த இவர், கடந்த ஆறுமாதங்களாக பணத்தை திருப்பி அளிப்பதில் தாமதித்துள்ளார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் குழந்தைவேலு சீட்டுப் பணத்தை சுருட்டிக்கொண்டு தன் குடும்பத்துடன் கள்ளம்பாளையத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார்.

ஏலச்சீட்டில் பணம் இழந்தவர்கள்

இதனால், பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று, ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றிய குழந்தைவேலை கைது செய்து, இழந்த பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். மேலும், அவர்கள் ரூ.5 கோடிக்கும் மேல் பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

திருவள்ளூர் அருகே ஏலச்சீட்டு மோசடி செய்தவர் கைது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details