திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த நாரணாபுரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் முத்துலட்சுமி. இவர் பாலசுப்ரமணியன் என்பவரின் இறப்பு சான்றிதழை கொடுக்க கடந்த ஒரு மாத காலமாக அவரது மகன் சுந்தரேசனை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
காலில் விழுந்து மன்னிப்பு கோரிய வி.ஏ.ஓ! நடந்தது என்ன? - muthulakshmi
திருப்பூர்: பல்லடம் அருகே பாலசுப்ரமணியன் என்பவரின் காலில் கிராம நிர்வாக அலுவலகர் முத்துலட்சுமி விழுந்து மன்னிப்பு கோரியுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
vao
இதனால் ஆத்திரமடைந்த சுந்தரேசன், தனது உறவினர்களுடன் சேர்ந்து கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பதற்றமடைந்த முத்துலட்சுமி, சுந்தரேசனின் காலில் விழுந்து மன்னிப்பு கோரியதுடன், இறப்பு சான்றிதழ் விரைவில் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். பின்னர், சுந்தரேசன் மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.