திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீர் வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட உப்பாறு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் ஆர். அர்ஜுனன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உப்பாறு அணைக்கு அருகே பந்தலிட்டு தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின்போது, "பரம்பிக்குளம் ஆழியாறு நீர்த்தேக்கத் திட்டத்தில் இருக்கக்கூடிய கண்காணிப்புப் பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் கோபி இருவரும் கேரளாவிற்கும் தொழில் நிறுவனங்களுக்கும் கோழிப்பண்ணை முதலாளிகளுக்கும் தண்ணீரைச் சட்டவிரோதமாக விற்றுக்கொண்டுள்ளனர்.
அவர்கள் மீது ஊழல் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்திற்கு நீரை முறைப்படுத்தி வழங்குவதற்கு நடுவண் மன்றத்தை அமைக்க வேண்டும்.