திருப்பூர்:தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி பிரதான வாய்க்காலில் அரசூர் ஷட்டரில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி டிசம்பர் 8ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இன்று 6ஆவது நாள் போராட்டத்தில், திருப்பூர் உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினருக்கு ஆதரவாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தாராபுரம் நகரச் செயலாளர் வாரணவாசை, மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் செல்லதுரை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலாராணி உள்ளிட்டோர் விநோதமான முறையில் ஒற்றைக்காலில் நொண்டியடித்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.