தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா காலத்தில் திருப்பூரில் குடை விற்பனை அமோகம்: அட காரணம் இதுதானா? - திருப்பூர் மாவட்டச் செய்திகள்

திருப்பூர்: மாவட்டத்தில் மதுபானங்கள் வாங்க கட்டாயம் குடை கொண்டுவர வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவையடுத்து, அதிக அளவில் அங்கு குடைகள் விற்பனையாகிறது.

Umbrella sale incresed after the Tiruppur District Collector order
Umbrella sale incresed after the Tiruppur District Collector order

By

Published : May 6, 2020, 10:46 PM IST

நாளை முதல் டாஸ்மாக் மதுபானக்கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு திறக்கப்படும் மதுபானக் கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி குறைந்தது 6 அடியாவது இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது.

இவற்றுடன், குடைகளையும் சேர்த்து கொண்டு வர வேண்டும் என்ற புதிய நிபந்தனையை திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் விதித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், 'டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வாங்க வருபவர்கள் கட்டாயம் குடையுடன் வர வேண்டும் என்றும், வராதவர்களுக்கு மதுபானங்கள் வழங்கப்பட மாட்டாது' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து மாவட்டம் முழுவதும் குடை விற்பனை அதிகமாகியுள்ளது. எவ்வளவு விலையாக இருந்தாலும் சரி என்று குவார்ட்டரை(மது) வாங்குவதற்கு குடையை வாங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க..மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு - முதலமைச்சர் இல்லம் நோக்கி புறப்பட்ட 5 சிறுவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details