தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலைஞரா? மோடியா? தேர்தல் பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின்! - தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் செய்திகள்

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் கலைஞரே வேட்பாளராக நிற்பதாக நினைத்து வாக்களிக்க வேண்டுமென திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களுக்கு தெரிவித்தார்.

தேர்தல் பரப்புரையில்  உதயநிதி ஸ்டாலின்
தேர்தல் பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின்

By

Published : Mar 31, 2021, 12:17 PM IST

திருப்பூர் மாவட்டம் தெற்கு தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மேயர் செல்வராஜை ஆதரித்து மாஸ்கோ நகர் பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலானது கலைஞரா? மோடியா? என்பதற்கான தேர்தலாகும். எனவே 234 தொகுதிகளிலும் கலைஞரே வேட்பாளராக நிற்பதாக நினைத்து திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

அதுபோல முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர், ஜெயலலிதா இருந்த நாளில் நீட் தேர்வானது தமிழ்நாட்டில் வராத நிலையில் ,எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் வந்ததால் சுமார் 16 மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். எனவே இதுபோன்று மோடி அரசானது தமிழ்நாட்ற்கு செய்த துரோகங்களை மறக்காமல், ஏப்ரல் 6ஆம் தேதி திமுகாவிற்கு வாக்களிக்க வேண்டும்.

தேர்தல் பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின்

குறிப்பாக அதிமுகவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் அனைத்தும் பாஜகவிற்கான வாக்குகள். எனவே சிந்தித்து திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். மேலும் திமுக ஆட்சி அமைந்தவுடன் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என தெரிவிதார்.

இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்

ABOUT THE AUTHOR

...view details