திருப்பூர் விபத்தின் சிசிடிவி காட்சி திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பல்லடம் வழியாக, கோவையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது, பல்லடம் பேருந்து நிலையம் நுழைவாயில் அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலையில் தாறுமாறாக
மாலை 4:30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் பேருந்தின் முன்னால் சென்று கொண்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் என 4 வாகனங்கள் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் சென்ற 2 வாலிபர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் கவலைக்கிடமாக உயிருக்குப் போராடி வருகின்றனர். மேலும், காரில் சென்ற 2 குழந்தைகள் உள்பட 6 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அரசு தலைமை மருத்துவமனையில் காணாமல் போன சிறுவன், சிறுமி மீட்பு; கடத்தியவருக்கு போலீஸ் வலைவீச்சு!!
இதனையடுத்து சம்பவ இடத்தில் ஒன்றுகூடிய பொது மக்கள், விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநரை ஆகிய இருவரையும் ஆவேசமாகத் தாக்க முற்பட்டனர். உடனடியாக அந்த இடத்தில் இருந்து தப்பி ஒடிய இருவரும் விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள பல்லடம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் உதவியுடன், விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோ ஆகியவற்றின் மூலமாக, கோவை அரசு மருத்துவமனைக்கும் மற்றும் பல்லடம் தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பவ இடத்தில் விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்ட பல்லடம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நகைக்காக முதியவர் கொலை - கைரேகை மூலம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது!