தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அசாம் மாநில பெண் கூட்டு பாலியல் வழக்கு: மேலும் இருவர் கைது! - அசாம் மாநில பெண்ணிற்கு கூட்டு பாலியல்

திருப்பூர்: பல்லடம் அருகே அசாம் மாநில பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டு பாலியல் வழக்கில் கைதான இருவர்
கூட்டு பாலியல் வழக்கில் கைதான இருவர்

By

Published : Oct 3, 2020, 6:04 PM IST

Updated : Oct 3, 2020, 7:04 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள கள்ளிமேடு பகுதியில் வேலை தேடிவந்த அசாம் மாநில பெண்ணை ஆறு பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த பல்லடம் அனைத்து மகளிர் காவல் துறையினர், இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த மூன்று பேரை தேடிவந்த நிலையில், ராஜேஷ்குமார், தாமோதரன் ஆகிய இருவரை காவல் துறையினர் இன்று (அக்.3) கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய இளந்தமிழனை பல்லடம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கூட்டு பாலியல் வன்புணர்வு: ஆறு பேர் மீது வழக்குப்பதிவு!

Last Updated : Oct 3, 2020, 7:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details