சென்னையில் ஆட்டோ ஓட்டி வரும் தமிழ்ச்செல்வன் (39) தனது மனைவி கஸ்தூரி (32) மூத்த மகன் அயனேஸ்வரன் (10) மற்றும் இளைய மகன் பாலன் (9) ஆகியோருடன் வசித்து வந்தார். இவருக்கு போதிய வருமானம் இல்லாததினால், இவரது மனைவி கஸ்தூரியை கடந்த பத்து மாதங்கள் முன்பு திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் டெய்லராகவும், பின்னர் பெரியாயிபாளையம் அரசு பள்ளியில் அவரது மகன்களான அயனேஸ்வரனை 5ம் வகுப்பிலும், பாலனை 3-ம் வகுப்பிலும் சேர்த்துவிட்டு மீண்டும் சென்னைக்குச் சென்று ஆட்டோ ஓட்டி வந்தார்.
இந்நிலையில், அக்.22ஆம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்ற கஸ்தூரி இரவு வீடு திரும்பியதும் வீட்டில் மகன்கள் இல்லாததால் அக்கம்பக்கம் தேடி விசாரித்துள்ளார். அப்போது, அருகில் உள்ள பாறைக்குழி பகுதியில் விளையாடச் சென்றதாக, தனது மகன்களின் நண்பர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று கஸ்தூரி பார்த்த போது தனது மகன்களின் ஆடைகள் அங்கு இருந்தது தெரியவந்தது.