தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் 60 கிலோ எடையுள்ள 2 வெண்கலச் சிலைகள் பறிமுதல் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

திருப்பூர்: காரில் உரிய அனுமதியின்றி எடுத்துவந்த 60 கிலோ எடையுள்ள 2 வெண்கலச் சிலைகளைத் தேர்தல் அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

வெண்கல சிலைகள் பறிமுதல்
வெண்கல சிலைகள் பறிமுதல்

By

Published : Mar 6, 2021, 10:18 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் தேர்தல் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி அவர்கள் சோதனைசெய்தனர்.

அதில் உரிய உரிமம் இல்லாமல் 60 கிலோ எடையுள்ள இரண்டு வெண்கலச் சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சிலைகளைப் பறிமுதல்செய்த அலுவலர்கள், திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் அதனை எடுத்துவந்த முகமது ரசூல் என்பவரிடம் தேர்தல் அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சோதனைச் சாவடியில் டேரா போட்ட பறக்கும் படை.. தேர்தல் பணி தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details