தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்: இருவர் கைது! - ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள்

திருப்பூர்: ரூ.28 ஆயிரம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற இருவரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

two-arrested-for-circulating-counterfeit-notes-in-tirupur
two-arrested-for-circulating-counterfeit-notes-in-tirupur

By

Published : Aug 22, 2020, 6:42 PM IST

திருப்பூர் மாவட்டம், குன்னத்துார் பகுதியை சேர்ந்த செல்வி, மளிகைக் கடை நடத்தி கடை நடத்தி வருகிறார். இவரது மளிகைக் கடைக்கு நேற்று மாலை வந்த இரண்டு இளைஞர்கள், 50 ரூபாய்க்கு பொருள் வாங்கி விட்டு, 500 ரூபாய் நோட்டு கொடுத்துள்ளனர்.

மீதி பணத்தை செல்வி கொடுத்ததும், இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். இதையடுத்து ரூ.500 பணம் குறித்து செல்விக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

பின்னர் இது குறித்து குன்னத்துார் காவல் துறையினரிடம் அவர் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கோபி செல்லும் சாலையில் காவலர்கள் வாகனச்சோதனை நடத்தியபோது, சந்தேகத்துக்கிடமாக வந்த இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்போது அவர்கள், மதுரை புதுமேட்டு தெருவை சேர்ந்த சதீஷ், அலங்காநல்லுாரை சேர்ந்த புகழ் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்த 28 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை, புழக்கத்தில் விட வைத்திருந்ததும் தெரிய வந்தது.

பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு, இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவிநாசி ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மனைவியை தகாத வார்த்தையில் திட்டிய நண்பரை கொலைசெய்தவர் கைது

ABOUT THE AUTHOR

...view details