தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஜினியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி - burn Rajini's figure

திருப்பூர்: பெரியாரை அவதூறாகப் பேசிய நடிகர் ரஜினியைக் கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் இன்று காலை ரஜினியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்தனர்.

Trying to burn Rajini's figure
Trying to burn Rajini's figure

By

Published : Jan 21, 2020, 1:06 PM IST

கடந்த சில நாள்களுக்கு முன்பு துக்ளக் நிகழ்ச்சியில் பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய நடிகர் ரஜினியைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திராவிட கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், இன்று காலை திருப்பூர் ரயில்நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு ஆதித்தமிழர் பேரவையினர் ரஜினியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம் இருந்த உருவ பொம்மையைக் கைபற்றினர்.

ரஜினியின் உருவ பொம்மை எரிக்க முயற்சி

இதனையடுத்து, பேரவையின் மாவட்ட செயலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து, அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க:‘சாரி... பெரியார் குறித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது’ - ரஜினி திட்டவட்டம்

ABOUT THE AUTHOR

...view details