தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு கரோனா - மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்

திருப்பூர்: மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

மகளிர் காவல் நிலையம்
மகளிர் காவல் நிலையம்

By

Published : Aug 11, 2020, 6:05 AM IST

திருப்பூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட ஆய்வாளருடன் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் உள்பட பெண் காவலர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மாநகராட்சி ஊழியர்கள் சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு காவல் நிலையம் சுத்தம் செய்யப்பட்டது. இதனிடையே, புகார் அளிக்கவரும் பொதுமக்களிடம், காவல் நிலைய வளாகத்திலேயே மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.


ABOUT THE AUTHOR

...view details