திருப்பூர் பெரியகடை வீதி பகுதியில் வசித்துவருபவர் ஷேக். இவரது மனைவிக்கு ஏப்ரல் 4ஆம் தேதி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு பிறந்தது முதல் மூச்சு திணறல் பிரச்சனை இருந்துள்ளது.
இதனால் இக்குழந்தையை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதனையடுத்து நேற்று இக்குழந்தைக்கு மூச்சு திணறல் அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பெற்றோருக்கு பரிந்துரைத்துள்ளனர்.
அதன்படி 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை கொண்டு செல்லும்போது சூலூர் அருகே குழந்தைக்கு மூச்சுத் திணறல் அதிகமானதால் மருத்துவ உதவியாளர்கள் வேறு சிலிண்டரை மாற்றியுள்ளனர்.