தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூர் காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்பு! - திருப்பூர் காவல் ஆணையர்

திருப்பூர்: திருப்பூர் மாநகர் பகுதியின் புதிய காவல் ஆணையராக கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

By

Published : Jul 3, 2020, 3:12 PM IST

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக இருந்த சஞ்சய்குமார் பணி மாறுதல் ஆகி வேறு பகுதிக்கு மாற்றப்பட்டார். இதன் காரணமாக, மாவட்டத்தின் புதிய ஆணையராக, கார்த்திகேயன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கு முன்னதாக இவர், அவிநாசி பகுதியில் டிஎஸ்பியாகவும், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் எஸ்பி பதவியையும் வகித்து வந்த கார்த்திகேயன் தற்பொழுது காவல் ஆணையராக பதவி ஏற்றுள்ளார்.

திருப்பூர் காவல் ஆணையராக கார்த்தியகேயன் பொறுப்பேற்பு!

பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் கார்த்திகேயன், "திருப்பூர் மாநகர் பகுதிகளில் அதிகரித்துவரும் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல் துறையினர் முக்கிய பணியாற்றுவார்கள். திருப்பூர் மாநகர் பகுதிகளில் மதநல்லிணக்கத்தை பேணுவதற்கும் குற்றச்செயல்களை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details