சீனாவில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூர் அரசு மருத்துவமனையிலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், தனி வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாநில பொதுசுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கொரோனா வைரஸ் வார்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து பார்வையிட்டார்.
அதேபோல், மருத்துவர்கள், எந்த நேரத்திலும் சிகிச்சை அளிக்க தயாராக இருக்க வேண்டும், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வருவதற்காக, சிறப்பு, '108' ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், ஊழியர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைத் தலைவர் நிர்மலா உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.
மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பொதுசுகாதாரத் துறை இயக்குநர் இதையும் படிங்க: நாமக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவ பணிகள் இயக்குநர் ஆய்வு