திருப்பூர்:திருப்பூர் பாப்பங்குளம் அருகே கடந்த 24ஆம் தேதி அன்று சோளக்காட்டில் சிறுத்தை ஒன்று உலவியது. அந்த சிறுத்தை 2 விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மூவரை தாக்கியது. அதன் பின்னர் அங்கு அதனை பிடிக்க வனத்துறையினர் கண்காணிப்பு காமிரா மூலம் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
வனத்துறையினர் கடும் முயற்சி மேற்கொண்டும் சிறுத்தை பிடிபடாமல் திருப்பூர் நகருக்குள் தப்பி ஓடியது. இதனையடுத்து திருப்பூர் நகரில் மேலும் 2 பேரை தாக்கியது. கடந்த 4 நாள்களாக 24 மணி நேரமும் வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், திருப்பூரில் 7 பேரை தாக்கி கடந்த கடந்த 4 நாட்களாக திணறடித்து வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். திருப்பூர் அம்மாபாளையத்தில் உள்ள பழைய பனியன் குடோனில் புதருக்குள் சிறுத்தை பதுங்கி இருந்தது.