திருப்பத்தூர்: திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் சாலையில் நேற்று இரவு குடிபோதையில் வந்த திருநங்கை சாலையில் சென்ற நபரிடம் ஆபாசமாக பேசியதோடு, அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநர்களை ஆபசமாக பேசியதாக தெரிகிறது.
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரையும் காவல் ஆய்வாளரையும் அந்த திருநங்கை ஆபாசமாக பேசி உள்ளார். ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் போலீசார் அங்கிருந்து சென்றனர்.