தமிழ்நாட்டில் தப்பகுண்டுலிருந்து அணிக்கடவு வரை , அணிக்கடவிலிருந்து ராசிபாளையம் வரை , கோவை அரசூரிலிருந்து ஈங்கூர் வரை மின்சாரம் கொண்டு செல்வதற்காக விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாய நிலங்களில் மின்சார கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளை காவல்துறையினர் அத்துமீறி கைது செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் ஆட்சியர் மீது புகார் அளித்த டிராபிக் ராமசாமி ! - திருப்பூர் ஆட்சியர் மீது புகார்
திருப்பூர் : விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து மின்கோபுரம் அமைக்க அளவீடு பணிகளில் ஈடுபட்ட காவல்துறைக்கு அதிகாரம் அளித்த மாவட்ட ஆட்சியர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து மாநகர காவல் ஆணயர் அலுவலகத்தில் காவல்துறைக்கு அதிகாரம் அளித்த ஆட்சியர் மீது சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு ஒன்றை அளித்துள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாய நிலங்களில் யாரும் அத்துமீறி நுழைந்து அளவீடு நடத்தக்க கூடாது என சட்டம் இருக்கிறது. ஆனால், மாவட்ட ஆட்சியர் அளித்த அதிகாரத்தால் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து விவசாயிகளை துன்புறுத்தி வருகின்றனர்.
இதற்கு காரணமான மாவட்ட ஆட்சியர் மீதும் , காவல்துறையினர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளை வஞ்சிக்கும் இந்த ஆட்சி விரைவில் கவிழும் எனவும் அவர் தெரிவித்தார்.