திருப்பூர் பல்லடம் ரோடு, சந்தைப்பேட்டை அருகில் உள்ள டி.கே.டி., பேருந்து நிறுத்தம் பகுதியில் டிராஃபிக் ராமசாமி திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது, ஹெல்மெட் இல்லாமல் வாகனம் இயக்கியவர்களையும், வாகன உரிமம் இல்லாமல் வந்தவர்களையும் பிடித்து சாலை ஓரத்தில் நிறுத்தினார். வாகன சோதனையின் போது தன் மீது ஒரு வாகன ஓட்டி இடிக்க வந்ததாகவும், அதை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறிய டிராஃபிக் ராமசாமி திடீரென நடுரோட்டில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டார்.