கரோனா அச்சம் காரணமாக தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் எந்தவித காரணமும் இல்லாமல் பொதுமக்கள் வெளியே சுற்றிவருகின்றனர்.
திருப்பூரில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றிவருகின்றனர். இவர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டைகளையும் அறிவுரைகளையும் வழங்கிவருகின்றனர்.
ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் போலீஸார் இதனையடுத்து திருப்பூர் வடக்கு உதவி ஆணையர் வெற்றி வேந்தன் தலைமையில், திருப்பூர் வடக்கு காவல் ஆய்வாளர் கணேசன் உள்ளிட்ட காவலர்கள் மாநகரின் முக்கிய சாலையான குமரன் சாலை, கோர்ட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பயணிக்கும் வாகனங்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பல முறை ஒரே வாகனம் தொடர்ந்து பயணிப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.