திருப்பூர் மாவட்டம் சின்னாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்ரகுப்தர் கோயிலில் சித்ராபவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்றுவரும் திருவிழாவில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கலந்துகொண்டு வழிபட்டார். சின்னாண்டிபாளையம் பகுதியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் அவரை பட்டாசு வெடித்தும் மேளதாளங்களுடன் வரவேற்றனர். கோவிலுக்கு வந்த அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து பூரண கும்ப மரியாதையு அளித்தனர்.
அவர் மோடிக்கு வாக்களிக்க கூறவில்லை: ரஜினி சகோதரர் சத்யநாராயண ராவ் - ரஜினிகாந்த்
திருப்பூர்: பாஜகவின் திட்டங்களை ஆதரித்தாரே தவிர ரஜினிகாந்த் மோடிக்கு வாக்களிக்க கூறவில்லை என அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் கூறியுள்ளார்.
sathya
சாமி தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மே 23ஆம் தேதிக்கு பிறகு ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக இருக்கும். அவர் கூறியபடியே சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவார் .
அதேபோல் பாஜக அரசின் நல்ல திட்டங்களை அவர் ஆதரித்தாரே தவிர மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என ரஜினி கூறவில்லை. ரஜினிகாந்த் கமல்ஹாசன் நட்பு திரைத்துறைப் போலவே அரசியல் துறையிலும் இருக்கும்” என்றார்.