தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோதமாக இயங்கிய பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர்: சட்டவிரோதமாக செயல்பட்டதோடு, சாயக் கழிவுகளை சுத்திகரிக்காமல் கால்வாயிலும், நிலத்திலும் வெளியேற்றி வந்த 15 பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பை மாசுக்கட்டுபாட்டு வாரிய அலுவலர்கள் துண்டித்தனர்.

கால்வாயில் வெளியேறும் சாயக்கழிவு

By

Published : May 9, 2019, 3:09 PM IST

திருப்பூர் மாவட்டம், சிறுபூலுவப்பட்டி, அம்மாபாளையம், சாமுண்டிபுரம், தென்னம்பாளையம், ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பிரிண்டிங் நிறுவனங்கள் இயங்குவதோடு மட்டுமல்லாமல், சாயக்கழிவுகளையும் வெளியேற்றி வருவதாக பொதுமக்கள் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்தனர்.

சட்டவிரோதமாக இயங்கிய வரும் பிரிண்டிங் நிறுவனம்

புகாரின் பேரில் அந்த பகுதிகளுக்கு வந்த அலுவலர்கள் சோதனை மேற்கொண்டதில், 15 பிரிண்டிங் நிறுவனங்கள் அனுமதியின்றி இயங்கியதோடு மட்டுமல்லாமல் சுத்திகரிக்காமல் சாயக்கழிவு நீரை வெளியேற்றி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த 15 நிறுவனங்களின் மின்இணைப்பை அலுவலர்கள் துண்டித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details